வெயில் காலத்தில் எங்காவது மண்பானை தண்ணீரைப் பார்த்தாள் உடனே அதை அள்ளி பருக வேண்டும் என்று மனதில் தோன்றும். அதற்குக் காரணம் மண்பானை தண்ணீர் ஆனது இள நீரின் குளிர்ச்சியை காட்டிலும் இதற்கு குளிர்ச்சி அதிகம் அதன் ருசியும் அதிகம் இதை அனுபவித்தவர்களுக்கு தான் நன்கு தெரியும்.
நவீன காலத்தில் எல்லோரும் ஃப்ரிட்ஜில் தண்ணீரை வைத்து அதை குளிர்வித்து குடிக்கின்றனர் இது மனித உடலில் பல்வேறு பக்க விளைவுகளை உண்டாக்குகின்றன இது அனைவருக்கும் தெரியும் இருந்தாலும் அதை தெரிந்தே செய்கின்றோம். மண்பானை தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறுகின்றன இது படித்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.
மண்பானை ஆவியாகும் தன்மை கொண்டது இதன் காரணமாக தண்ணீர் சூடாக இருந்தாலும் படிப்படியாக குளிர்விக்கும் தன்மை கொண்டது. இந்தத் தன்மை வேறு எந்தப் பாத்திரத்திற்கும் கிடையாது.
தொண்டைக்கு இதமாகவும் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் உள்ளது
மண்பானை களிமண்ணால் செய்யப்பட்டது, இது தண்ணீரை சரியான விகிதத்தில் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. மண் பானையில் உள்ள குளிர்ந்த குடிநீரை குடிப்பதன் மூலம் சளி காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் வராது. பிரிட்ஜில் உள்ள குளிர்ந்த நீரை பருகுவதனால் சளி காய்ச்சல் போன்ற நோய்கள் மனிதர்களுக்கு வரும்.
மெட்டபாலிசத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது
மனித உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரான் அளவை சமன் செய்ய உதவுகிறது.
மனித உடலில் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்த உதவுகிறது.
மண்பானை தண்ணீரில் உள்ள ஆல்கலைன் ஆனது நமது உடலில் உள்ள பி.எச் அவை சரியாக பராமரிக்க உதவுகிறது.
நமது உடலில் உள்ள நீர் சத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.
பருவகால நோய்கள்
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சரும நோய்கள் முதல் அம்மை நோய்கள் வரை பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகும். மண்பானை நீரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் பருவ கால நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது. உடலில் வெப்பத்தை சீராக பராமரிக்க உதவுகிறது அதனால் மண்பானை தண்ணீர் குடிப்போம் வளமுடன் வாழ்வோம்.
Comments
Post a Comment